பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காததன் காரணம் தான் என்ன?
ஸ்ரீலங்காவில் நடைமுறையிலுள்ள கொடிய பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் ஏன் நீக்கவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்ட னை விதிக்கப்பட்ட சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனை பொது மன்னி ப்பின் கீழ் அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி யுள்ளார்.
புதிய பயங்கரவாத தடுப்பு ச்ச்ட்டத்தை தயாரிப்பதில் ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்னேற்றம் கண்டுள்ளதாக ஜெனிவாவிற்கான ஸ்ரீலங்காவின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க ஜெனிவாவில் தெரிவித்துள்ளாா்.
இந்த நிலையில் நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்கிழமை உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வாக்குறுதி வழங்கிய அரசா ங்கம், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காமைக்கான காரணம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.