எழிலன் உள்ளிட்டவர்களின் வழக்கு விசாரணை இழுத்தடிப்பு!
எழிலன் உள்ளிட்டவர்களின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
இறுதிப்போரி இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போகச் செய்யப்பட்ட திருகோண மலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்டவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் ப.சுதர்சன் தலைமை யில் வழக்கு விசாரணைக்கு எடுத்து க்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு தொடு னர் தரப்பின் எவரும் சமூகம் தராத காரணத்தால் குறித்த வழக்கினை எதிர்வரும் ஆனி மாதம் 07 ஆம் திக திக்கு ஒத்திவைத்துள்ளதாகவும் இனி வரும் காலங்களில் இவ் வழக்கு தொடர்ந்து நடத்தப்பட்டு முடிவு கிடைக்கு மென எதிர்பார்ப்பதாக காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக முன்னி லையான சட்டத்தரணி எஸ். ரட்ணவேல் தெரிவித்துள்ளார்.