ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்ற அவசியமில்லை - கலாநிதி சரத் அமுனுகம.!
ஜெனிவா மனித உரிமை பேரவையிலும் சர்வதேச அமைப்புகளுக்கும் கொடு த்த வாக்குறுதிகளை முழுமையாக நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அவசியம் எமக்கு இல்லை.
அரசியல் அமைப்பின் பிரகாரமே எமது நகர்வுகளை நாம் முன்னெடுப் போம்.
அத்துடன் சர்வதேச புலி ஆதரவு அமைப்புகளுடன் எந்த பேச்சுவார் த்தைக்கும் இடமில்லையென அமை ச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளாா்.
ஜெனிவாவில் குற்றவாளியாக இலங்கை நிற்கும் இறுதி விஜயம் இதுவாகவே இருக்க வேண்டும். இனியொருபோதும் சாட்சிக்கூண்டில் நிற்கும் பயணங்களுக்கு இடமில்லையெனத் தெரிவித்துள்ளாா்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றபோது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
அவர் மேலும் கூறுகையில்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதில் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இம்முறை இலங்கை பிரதிநிதிகள் குழாமில் வெளிவிவகார அமைச்சின் குழுவுடன் நாமும் கலந்துகொண்டிருந்தோம்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்தினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமையவே தொடர்ச்சியாக இலங்கை விவகாரங்கள் குறித்து ஆராயப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இதில் மனித உரிமை பேரவையின் நிலைப்பாடு, அங்கத்துவ நாடுகளின் நிலை ப்பாடு, இலங்கை அரசாங்க பிரதிநிதிகளின் நிலைப்பாடு மற்றும் சிவில், அரச சார்பற்ற நிறுவனங்களின் நிலைப்பாடுகள் என்பன ஆராயப்படும்.
நாம் கடந்த காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு அமைய சில முக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். குறிப்பாக காணாமல்போனோர் குறித்த காரியாலயம் அமைக்கப்பட்டது.
வலுக்கட்டாயமாக காணமால் போனோர் குறித்த சர்வதேச சமவாய சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கபட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில் இலங்கையின் செயற்பாடுகளில் மந்தகதியான போக்கே முன்னெடுக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச நாடுகளும் குற்றம் சுமத்தியுள்ளன.
அதனை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அத்துடன் மனித உரிமைகள் பேரவையின் அவசரத்திற்காகவோ அல்லது சர்வதேச சிவில் அமைப்புகளின் தேவைக்காகவோ எம்மால் துரிதமாக எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது.
இது ஜனநாயக நாடு எனினும் தீர்வுகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கும் போது ஆழமாக சிந்தித்து மெதுவாகவே தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும்.
அதேபோல் இதற்கு முன்னர் ஜெனிவாவில் என்ன தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தாலும், என்ன வாக்குறுதிகளை கொடுக்கப்பட்டிருந்தாலும் அவற்றையெல் லாம் இலங்கையில் நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற அவசியம் எமக்கு இல்லை.
நாம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை இலங்கை அரசியல் அமைப்பின் பிரகாரமே முன்னெடுப்போம். சர்வதேசம் கூறியதற்காக எம்மால் இங்கு தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முடியாது. இம்முறை ஜெனிவா கூட்டத் தொட ரில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை தெளிவாக முன்வைத்துள்ளோம்.
மேலும் சர்வதேச நீதிமன்ற கட்டமைப்புகளை அனுமதித்து அதன்மூலமாக உண்மைகளை கண்டறியும் செயற்பாடுகளை முன்னெடுப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
உண்மைகளை கண்டறிய உள்ளக பொறிமுறை செயற்பாடுகளை கையாள முடியும். சர்வதேச தொழிநுட்ப உதவிகளை நாம் மறுக்கவும் இல்லை. எனி னும் நீதி விசாரணைகளை இலங்கையை மூலமாக மட்டுமே இடம்பெற முடி யும். இதில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை.
இவ் விடயத்தில் சிவில் அமைப்புகளும், சர்வதேச அமைப்புகளும் தமது கருத்துக்களை கூறி எம்மை விமர்சிக்க முடியும். எனினும் அரசாங்கமாக நாம் இக் கருத்துக்களை செவிமடுக்க தயாராக இல்லை. இதில் வாத விவாதங்களுக்கு ஒருபோதும் இடமில்லை.
அதேபோல் இந்த நாட்டில் பயங்கரவாதம் நிலவிய காலத்தில் பல நெருக்கடிகளுக்கு நாம் முகங்கொடுக்க நேர்ந்தது. இலங்கையின் பயங்கரவாதமே சர்வதேச பயங்கரவாத வளர்ச்சிக்கு கூட துணைநின்றது எனலாம். அவ்வாறான ஒரு நிலையில் எமது இராணுவம் பயங்கரவாதத்தை தோற்கடித்து இன்று யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகளாகின்றன.
மக்கள் அமைதியாக வாழ்கின்றனர், இன ரீதியிலான நெருக்கடிகள் எவையும் இல்லாது நாடு அமைதியான பயணத்தினை முன்னெடுத்து செல்கின்றது. அவ்வாறு இருக்கையில் சர்வதேச நாடுகளில் உள்ள பயங்கரவாத ஆதரவு அமைப்புகள் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
இப் பயங்கரவாத அமைப்புகள் எம்மை பேச்சுவார்த்தைகளுக்கு அழைக்கின்றன . எமக்கு அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க எந்த அவசியமும் இல்லை. தமிழ் பயங்கரவாத ஆதரவு அமைப்புகளை சந்திக்க நாம் தயாராகவும் இல்லை.
அவர்களுடன் பேச்சுவார்த்தையும் இல்லை.
மேலும் இம்முறை இலங்கை அரசாங்கமாக நாம் மிகமுக்கிய தீர்மானம் ஒன்றை முன்னெடுத்துள்ளோம். இல ங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. இந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
யுத்த மனோநிலையில் இருந்து மக்கள் விடுபட்டு இன்று அமைதியான நாட்டுக்குள் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தொடர்ந்தும் மனித உரிமைகள் பேரவையில் குற்றவாளியாக நிற்க முடியாது.
மனித உரிமைகள் குறித்து ஜெனிவாவில் நாம் குற்றவாளியாக நிற்கும் இறுதி சந்தர்ப்பம் இதுவாகே அமைய வேண்டும். நாம் இன்று பொறுப்புக்கூறவும் நெருக்கடிகளை சந்திக்கவும் பயங்கரவாதிகளே காரணமாகும். அவர்கள் முன்னிலையில் குற்றவாளிகளாக நாம் நிற்கவேண்டிய அவசியம் இல்லை.
இலங்கையை ஒரு சாட்டாக வைத்துகொண்டு சர்வதேச அமைப்புகளும் மனித உரிமைகள் பேரவையும் அவர்களின் இருப்பினை தக்கவைக்க முயற் சித்து வருகின்றன. ஆகவே இனியும் நாம் மனித உரிமைகள் பேரவையில் சாட்சியாளர்களாக நிற்கவேண்டிய நிலைமையினை இத் தடவையுடன் நிறு த்திக்கொள்ள வேண்டும்.
வெளிவிவகார அமைச்சின் ஊடக அதற்கான பரந்த நடவடிக்கைகளை முன் னெடுக்க வேண்டும். சர்வதேச நாடுகளில் இருக்கும் எமது நாட்டின் தூதுவர் கள் மூலமாக எமது நிலைப்பாட்டினை வெளிபடுத்த வேண்டும். சர்வதேச நாடு களை எம்பக்கம் ஈர்க்கும் நடவடிக்கைகளை கையாள வேண்டும் அதை விடு த்து நாம் தொடர்ந்தும் குற்றவாளியாக நிற்க முடியாதெனத் தெரிவித்துள் ளாா்.