ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறலை குற்றவியல் நீதிமன்றிடம் கையளியுங்கள்.! (காணொளி)
ஸ்ரீலங்காவின் குற்றவியல் பொறுப்புக் கூறலை உண்மையாக நிலைநிறுத்த வேண்டுமானால் அதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் அல்லது அதற்கான விசேட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அமைத்து, அதனிடம் ஒப்படைக்க வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடு த்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொட ரில் நேற்று இடம்பெற்ற அமர்வில் உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் மற்றும் அதன் முக்கிய உறுப்பினர் ஆகியோர் ஐக்கிய நாடுகள் சபையிட மும் அமெரிக்கா உள்ளிட்ட உறுப்பு நாடுகளிடமும் இக் கோரிக்கையை பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை யின் 37 ஆவது கூட்டத் தொடரில் ஸ்ரீலங்காவின் பொறுப்புக் கூறல் தொடர்பில் மார்ச் 21 ஆம் திகதியான நேற்று முன்தினம் ஐ.நா மனித உரிமைகள் ஆணை யாளரின் வாய்மூல அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
எனினும் நேற்று முன்தினம் ஸ்ரீலங்கா தொடர்பில் ஆராய்வதற்கு நேரம் போதமையையடுத்து 22 ஆம் திகதியான நேற்றைய அமர்வின் போது, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் உறுப்பு நாடுகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு கருத்துக்களைத் தெரிவிக்க அனு மதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பிரான்சின் தமிழ் மாணவர்களின் சங்கத்தின் சார்பில் ஜெனீவா அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்ன ணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,….. “ஸ்ரீலங்காவில் பொறு ப்புக் கூறலை மேம்படுத்துவதற்காக வேறு மாற்று வழிகளை நாட வேண்டும் என்ற மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத் தரப்பு எடுத்துள்ள நிலைப்பாட்டை வலிமையாக வரவேற்கின்றோம்.
அதேசமயம், இலங்கை விடயத்தில் குற்றவியல் பொறுப்புக் கூறலை உண்மையாக நிலைநிறுத்துவதற்காக அதனை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திடம் அல்லது அதற்கான விசேட சர்வதேச குற்றவியல் நீதிமன்ற த்தை அமைத்து அதனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எமது நிலைப்பா ட்டை மீளவும் வலியுறுத்துகின்றோம்.
ஏனெனில் ஸ்ரீலங்காவில் யுத்தத்தின் போது மிக மோசமாக மீறப்பட்ட மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை நியாயப்படுத்தி அதன டிப்படையிலேயே ஸ்ரீலங்கா தொடர்பான விசேட தீர்மானம் இங்கு நிறை வேற்றப்பட்டது.
நல்லிணக்கம் ஏற்படுவதற்கு மிக அவசியமான நிலைமாறு கால நீதியும், குற்ற வியல் குற்றப் பொறுப்புக் கூறலும் ஸ்ரீலங்காவைப் பொறுத்தவரை வழமை யான பூகோள காலக்கிரம மீளாய்வு மூலம் எட்டப்பட முடியாதவை என்று கருதியே இந்தத் தீர்மானம் இங்கு கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
தங்களுக்கு எதிராக இனவழிப்புக் குற்றம் புரியப்பட்டிருப்பதாக விசேடமாகத் தமிழர் கருதும் நிலையில் ஸ்ரீலங்காவில் நின்று நிலைக்கக் கூடிய உண்மை யான நல்லிணக்கம் ஏற்படுவதற்கு நிலை மாறுகால நீதியும், மிக முக்கியமாக குற்றப் பொறுப்புக் கூறலும், மிகவும் அடிப்படையானவை என்பது தெளிவா னது.
ஆனால், ஸ்ரீலங்கா ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலுடன் தொடர்பாடலை வெளிப்படுத்துவது வெறும் பொது நல்லுறவு தொடர்பான நடிப்பேயன்றி, பொறுப்புக் கூறல் சம்பந்தமான தனது கடப்பாட்டை நடைமுறைப்படுத்தும் நோக்கம் கொண்டல்ல என்பது இன்று இங்கு மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் வாய் மூல விளக்கம் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ள தாகத் தெரிவித்துள்ளாா்.
மேலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் முக்கிய உறுப்பினரான சட்டத்தரணி சுகாஸ் கனரத்னம் ஆகியோரும் இந்த அமர்வில் உரையாற்றியிருந்தனர்.
அவர்களும் ஸ்ரீலங்கா அரசு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் தொட ர்ச்சியாக உதாசீனமாக இருந்து வருவதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி, பொறுப்புக்கூறல் விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் கைய ளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தப்பட்டுள்ளது.