ஐ.தே.கவுடன் பயணிப்பது கஷ்டம் - பதிலடி கொடுப்போம் - ரவூப் ஹக்கீம்
"உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் மாவட்ட தலைமைகள் எங்களை நாடி வந்து தீவிர மாக பேசிக்கொண்டிருக்கின்றனர்" என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவ ரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு நிகழ்ந்துள்ள நம்பிக்கை மோசடிகளை பார்க்கின்ற போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனியும் இணைந்து பய ணிப்பது மிகவும் கஷ்டமான விடயமாகியுள்ளதாகவும், முஸ்லிம் காங்கிரஸ் வெற்றியீட்டிய சபைகளில் எம்மை புறந்தள்ளி விட்டு மாற்று அணிகளுடன் ஐ.தே.க ஆட்சியமைத்தால் அரசியல் ரீதியாக தகுந்த பதிலடி கொடுப்போம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.