பொறுப்புக்கூறும் விடயத்தில் ஸ்ரீலங்கா அரசை நம்ப முடியாது - சிவாஜிலிங்கம்.!
பொறுப்புக்கூறும் விடயத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை இனிமேலும் நம்ப முடியாதென தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஸ்ரீலங்கா அரசாங்கத்தை சர்வதேச நீதிப் பொறிமுறைக்கு முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்னும் ஒரு மாதகாலத்திற்குள் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் இன ப்படு கொலையில் 10 ஆம் ஆண்டு நினைவு நாளை அனுஷ்டிக்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக தமிழ் மக்கள் மீது இழைக்கப்படட கொடூர ங்களுக்கான நீதி பொறி முறையை காண வேண்டுமெனவும் சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நேற்றைய தினம் ஜெனீவாவில் முன்வைத்த அறிக்கையை வரவேற்று யாழ்.ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் சிவாஜிலிங்கம் இக் கருத்துக்களை முன்வைத்தி ருக்கின்றார்.
நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு அடைந்துள்ள பின்னடைவுக்கு வடமாகாண சபையே காரணம் என மாவை சேனாதிராஜா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக ஊடகவியலாளர்கள் சிவாஜிலிங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளாா்.