ஜெனீவா தீா்மானத்தில் அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகிக்கும் - சுமந்திரன்
பொறுப்புக்கூறல் தொடர்பான ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவ தில் ஸ்ரீலங்கா அரசு காண்பித்து வரும் அக்கறையின்மை தொடர்பில் அதி ருப்தி அடைந்துள்ள அமெரிக்கா, ஜெனீவா அமர்வுகளின் போது கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்குமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்து ள்ளது.
ஸ்ரீலங்கா அரசினால் நிறைவேற்றப்ப டாத யுத்தக் குற்றங்கள் உட்பட மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக 2015 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேர வையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான த்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருடகால அவகாசத்தை வழங்க இணக்கம் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உலகத் தமிழர் பேரவையினருடன் இணைந்து நேற்று ஜெனீவாவிற்கான அமெரிக்காவின் உயர் அதிகாரியை சந்தித்திரு ந்தது.

அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் நடைபெற்ற இச் சந்திப்பை அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இக் கருத்தை தெரிவித்துள்ளாா்.
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரம் தொட ர்பில் இன்றைய தினம் ஆராயப்படவுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உலகத் தமிழர் பேரவை யின் பிரதி நிதிகள் சகிதம் அமெரிக்க உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்து ள்ளார்.
உலகத் தமிழர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் அருட்தந்தை இமானு வேல், சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் சுரேன் சுரேந்திரன் ஆகி யோரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஜெனீவாவிற்கான அமெரிக்காவின் துணைத் தூதுவர் கெலி கெரியுடனான சந்திப்பின் போது 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஸ்ரீலங்கா அரசு நடைமுறைப்படுத்தாது இருப்பது தொடர்பில் கவலைவெளியிட்ட தமிழ் பிரதிநிதிகள் குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வைப்பதற்கான அழு த்தங்களை பிரயோகிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கு அமெரிக்க இராஜதந்திரி கெலி சாதகமான பதிலைத் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதேவேளை தமிழ் பிரதிநிதிகள் அண்மையில் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்த்மன் உட்பட ஐ.நா அதிகாரிகளை யும் சந்தித்துள்ளனர்.