Breaking News

இனவாதத்தை பரப்பும் ஆவணங்கள் மீட்பு - ருவன் குண­சே­கர.!

கண்டி மாவட்­ட­மெங்கும் பர­விய வன்­மு­றை­களின் பிர­தான சந்­தே­க ந­ப­ரான மஹ­சொஹொன் பல­காய எனும் அமைப்பின் தலைவர் அமித் வீர­சிங்­கவின் குண்­ட­சாலை–நத்­த­ரம்­பொத்­தவில் உள்ள அலு­வ­லகம் நேற்று பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் அதி­கா­ரி­களால் முற்­று­கை­யி­டப்­பட்டு சோதனை செய்­யப்­பட்­ட­துடன் அதி­லிருந்து பல சான்­று­கள் கைப்­பற்றப்பட்டு கொழும்­புக்கு மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­கா­க எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பிர­தானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்­வாவின் நேரடி மேற்­பார்­வையில் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பதில் பணிப்­பாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஜகத் விஷாங்­கவின் ஆலோ­சனை பிர­காரம் குழு­வினால் குறித்த அலு­வ­லகம் சுற்றி வளைக்­கப்பட்டு, பல்­வேறு பொருட்கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

தற்­போது 2018 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க அவ­ச­ர­கால விதி விதா­னங்­க­ளுக்கு அமை­வாக 14 நாள் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்பட்டு விசா­ரணைச் செய்­யப்ப்டும் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யான அமித் வீர­சிங்­க­வி­ட­மி­ருந்து வெளி­பப்­டுத்­தப்பட்ட தக­வல்­க­ளுக்கு அமை­வாக இந்த அலு­வ­ல­கத்தை சுற்றி வளைத்­த­தா­கவும் இதன்­போது ஆயி­ரக்­க­ணக்­கான இன­வா­தத்தை தூன்டும் ஆயி­ரக்­க­ணக்­கான போஸ்­டர்கள், பதா­தைகள், கையே­டு­களை கைப்­பற்­றி­ய­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்து ள்ளாா்.

பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுத்த இந்த திடீர் சுற்­றி­வ­ளை ப்பின் போது, பொது ­மக்­க­ளி­டையே பகிா்ந்­த­ளிக்க தயார் நிலையில் இருந்த ஆயி­ரக்­க­ணக்­கான மிகக் ­க­டு­மை­யாக இன­வா­தத்தை தூன்டும் சொற் ­பி­ர­யோ­க ங்கள் அடங்­கிய கையே­டுகள், போஸ்டர், பதா­தை­க­ளுக்கு மேல­தி­க­மாக பல வங்கிப் புத்­த­கங்­களும் சிக்­கி­யுள்­ளன. 

அத்­துடன் நிதி வைப்­பி­லிட்­ட­மைக்­கான பல பற்றுச் சீட்­டுக்­களும் அங்­கி­ருந்து கைப்­பற்­றப்பட்டுள்ள நிலையில் அமித் வீர­சிங்­கவின் மஹ­சொஹொன் பல­கா­யவின் நிதிப் பின் புலம் தொடர்பில் விசா­ர­ணைகள் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. 

இத­னை­விட அந்த அலு­வ­ல­கத்தில் இருந்து வாகன அனு­ம­திப்­பத்­தி­ரங்கள், இன­வாத சொற்­ப­தங்கள் அடங்­கிய விப­ரங்கள், ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை நடாத்த தயார்ப்பட்­டி­ருந்த இலச்­சி­னை­யுடன் கூடிய ஒலி­வாங்கி என்­ப­னவும் கைப்­பற்­றப்­பட்­ட­தா­கவும் அமித்­திடம் முன்­னெ­டுக்­கப்பட்ட விசா­ர­ணை­களில் வன்­மு­றை­க­ளுக்கு என தயாரான 7 பெற்றோல் குன்­டு­க­ளையும் மீட்­ட­தா­கவும் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்துள்ளாா்.  

இந் நிலையில் அந்த அலு­வ­ல­கத்தில் இருந்த 4 கன­ணி­களின் சி.பி.யூ. க்களை யும் கைப்­பற்­றிய பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் அவற்­றையும் நான்காம் மாடிக்கு எடுத்து வந்­துள்­ளனர். 

அந்த சி.பி.யூ. க்களும், அமித்தின் தொலை­பே­சியும் அதிலுள்ள தக­வல்­களை பகுப்­பாய்வு செய்து வெளி­ப்படுத்துவதாக பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­ன ரால் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு புல­னா­ய்வுக் குழு­விடம் கையளி க்கப்பட்டுள்ளன.  

குறிப்பாக அமித்தின் தொலைபேசிக்கு வந்த அழைப்புக்கள், அவர் அழைத்த அழைப்புக்கள் குறுஞ்செய்திகள் தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்தவும், சி.பி.யூ.வில் உள்ள தரவுகளை பெறவுமே இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரி வின் சிறப்பு நிபுணர்கள் அடங்கிய குழுவிடம் கையளித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளாா்.