தமிழரசு-புளொட் போட்டியில் புளொட் வெற்றி பெற்றது
வலிகாமம் தெற்கு பிரதேசசபைத் தவிசாளர் தெரிவுப்
போட்டியில் தமிழரசுக் கட்சியும் புளொட்டும் இரு பிரிவுகளாக பிரிந்து மோதியதால் ஏற்பட்ட கடும் பரப்பரப்புக்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் புளொட் அமைப்பு வெற்றிபெற்றுள்ளது. புளொட் அமைப்பின் உறுப்பினரான கருணாகரன் தர்சன் தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
போட்டியில் தமிழரசுக் கட்சியும் புளொட்டும் இரு பிரிவுகளாக பிரிந்து மோதியதால் ஏற்பட்ட கடும் பரப்பரப்புக்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் புளொட் அமைப்பு வெற்றிபெற்றுள்ளது. புளொட் அமைப்பின் உறுப்பினரான கருணாகரன் தர்சன் தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
ஆசனப் பங்கீட்டின்போதே வலிகாமம் தெற்கு பிரதேச சபை புளொட் உறுப்பினருக்கு வழங்குவதாக பங்காளிகளுக்குள் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் தவிசாளர் பிரகாஸ் தானும் தவிசாளர் தெரிவில் களத்தில் குதித்தார். புளொட் சார்பில் கருணாகரன் தர்சன் பிரேரிக்கப்பட்டிருந்தார். புளொட்டுக்கு 6 ஆசனம் தமிழரசுக்கு 5 ஆசனம் எனும் அடிப்படையில் அங்கு 11 உறுப்பிர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருந்தது.
வாக்கெடுப்பினை பகிரங்க வாக்கெடுப்பாக நடத்துவதா இரகசிய வாக்கெடுப்பாக நடத்துவதா என கோரப்பட்டபோது பகிரங்க வாக்கெடுப்பு என 10 பேரும் இரகசிய வாக்கெடுப்பு என 20 பேரும் கோரிக்கை விடுத்தனர்.
அதனடிப்படையில் நடபெற்ற முதல் சுற்று பகிரங்க வாக்கெடுப்பில் புளொட்டினைச் சேர்ந்த கருணாகரன் தர்சன் 11 வாக்குகளையும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த தியாகராஜா பிரகாஸ் 09 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பாலசுந்தரம் சுரேஸ்குமார் 04 வாக்குகளையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சிவரூபன் லகிந்தன் 06 வாக்குகளையும் பெற்றனர்.
குறைந்த வாக்கு பெற்றவர் நீக்கப்பட்டு இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற சட்டவிதிப்படி ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பாலசுந்தரம் சுரேஸ்குமார் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு ஏனைய மூவருக்குமிடையில் 2 ஆம் சுற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
2ம் சுற்று வாக்கெடுப்பு
புளொட்டினைச் சேர்ந்த கருணாகரன் தர்சன் 12 வாக்குகளையும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த தியாகராஜா பிரகாஸ் 12 வாக்குகளையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சிவரூபன் லகிந்தன் 06 வாக்குகளையும் பெற்றனர். இதன்போதும் குறைந்த வாக்கு பெற்றவர் நீக்கப்பட்டு மூன்றாம் சுற்று வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற சட்டவிதிப்படி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சிவரூபன் லகிந்தன் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு மூன்றாம் சுற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தமிழரசு எதிர் புளொட் போட்டி இறுதியில் வெற்றி பெற்றது புளொட்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் பங்காளிகளான தமிழரசும் புளொட்டும் மூன்றாம் சுற்று வாக்கெடுப்பில் நேருக்கு நேர் மோதின. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 06 உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர். புளொட்டினைச் சேர்ந்த கருணாகரன் தர்சன் 12 வாக்குகளையும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த தியாகராஜா பிரகாஸ் 12 வாக்குகளையும் பெற்றனர். பின்னர் குலுக்கல் மூலம் புளொட்டினைச்சேர்ந்த