ஈ.பி.டி.பி,ஐ.தே.க,சு.க உடன் இணைந்தது த.தே.கூட்டமைப்பு
வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் கூட்டமைப்பால்
இனப்படுகொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தென்னிலங்கை பேரினவாதக் கட்சிகளுடனும் யுத்தகாலத்தில் பேரினவாதிகளின் ஒட்டுக் குழுக்களாகச் செயற்பட்டு தமிழர் தேசத்தை காட்டிக்கொடுத்தவர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டுவந்த கட்சிகளுடனும் இணைந்து உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்துவருகின்றது.
ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக மற்றும் ஈபிடிபியுடன் தரழரசுக் கட்சியின் பேச்சாளராக இருக்கின்ற சுமந்திரன் தமக்கு ஆதரவு வழங்குமாறு நேரடியாகவும் தனது பிரதிநிதிகள் ஊடகவும் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
சுமந்திரனின் தலைமையில் ஈ.பி.டி.பி யுடன் நடைபெற்ற பேச்சுக்கனிள் அடிப்படையில் முன்னணிக்கு ஒரு சபையையும் விட்டுக்கொடுக்க கூடாது என தீர்மானிக்கப்பட்டதாகவும் அதனடிப்படையில் யாருடைய ஆதரவைப்பெற்றேனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஒரு சபையிலேனும் ஆட்சியமைப்பதற்கு முடியாதவாறு திட்டங்கள் வகுக்கப்பட்டதாகவும் அதனடிப்படையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
யாழ் மாநகரசபையில் பகிரங்க வாக்கெடுப்பே கோரப்பட்டபோதும் முன்னணி உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பை கோரினால் நிலமை சிக்கலாகும் என அறிந்த கூட்டமைப்பு புதிதாக திருத்தப்பட்ட மாநகர சபை மண்டபத்தினுள் சி.சி.ரி.வி கமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக உறுப்பினர்களிடம் ஏற்கனவே தமிழரசுக்கட்சி சிலரூடாக தகவல்களை கசிய விட்டிருக்கிறது. தாம் யாருக்கு வாக்களிக்கப்போகிறோம் என்பதை இரகசியமாக முன்னெடுக்க முடியாத நிலை யாழ் மாநகர சபையில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.
யாழ் மாநகர சபையில்..
🔷 TNA ஆனோல்ட்டிற்கு ஆதரவளித்தவர்கள் மொத்தம் 18
1) தமிழரசுக்கட்சி – 16
2) சிறீலங்கா சுதந்திரக் கட்சி – 02
🔷 EPDP றெமிடியஸுக்கு ஆதரவளித்தவர்கள் மொத்தம் 13
1) EPDP -10
2) ஐக்கிய தேசிய கட்சி – 03
🔷 TNPF மணிவண்ணனுக்கு ஆதரவளித்தவர்கள் மொத்தம் 13
1) 13 பேரும் முன்னணி உறுப்பினர்கள்.
இறுதியில் ஈபிடிபியில் போட்டியிட்ட றெமீடியஸ் முன்னதாக கூட்டமைப்புடன் கலந்துரையாடியபடி தான் போட்டியிலிருந்து விலகுவதாக தமிழரசுக் கட்சிக்கு விட்டுக்கொடுக்க தமிழரசுக்கட்சி , சிறீலங்கா சுதந்திரக் கட்சி , EPDP ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இணைந்து யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஆட்சியமைத்துள்ளன.
அதன் தொடர்ச்சியாக சாவகச்சேரி நகரசபையிலும் சிங்கள பேரினவாத கட்சிகளான ஐ.தே.க ,சுதந்திரக்கட்சி,ஈ.பி.டி.பி மற்றும் வரதர் அணிகளுடன் சேர்ந்துகொண்டு முன்னணியை ஓரம்கட்டியுள்ளன.
அவ்வகையில் 12 பேர் தமிழரசுக்கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர். அவர்களில்
1. இலங்கை தமிழ் அரசு கட்சி – 05
2. ஈழ மக்கள் சனநாயக கட்சி – 03
3. சிறீலங்கா சுதந்திரக் கட்சி – 02
4. தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி – 01
5. ஐக்கிய தேசிய கட்சி – 01
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 06 பேரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் பிரேரிக்கப்பட்ட தவிசாளர் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளனர்.
இறுதியில் தமிழரசுக்கட்சி , சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஈழ மக்கள் சனநாயக கட்சி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி (ஈபிஆர் எல் எப் வரதர் அணி) ஆகியன இணைந்து சாவகச்சேரி நகரசபையில் புதிய அரசை நிறுவியுள்ளன.