சுதாகரனை விடுதலை செய்யுங்கள் ஐனாதிபதிக்கு முதலமைச்சர் கடிதம்!
தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் குடும்ப நிலையையும் குறிப்பாக அவருடைய சிறிய பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அவரை விடுதலை செய்யுமாறு கோரி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஐனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த சுதாகரன் கடந்த 2008 ம் ஆண்டு தொடக்கம் அரசியல் கைதியாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அவருடைய மனைவி இறந்துபோனார்.
மனைவியின் மரண சடங்கிற்காக ஆனந்த சுதாகரன் கிளிநொச்சிக்கு அழைத்துவரப்பட்டார். இதன் போது ஆனந்த சுதாகரனின் மகள் தந்தையுடன் இணைந்து சிறைச்சாலை பேருந்தில் ஏறிய சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதனையடுத்து ஆனந்த சுதாகரனின் மகள் ஐனாதிபதிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இன்று ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.