Breaking News

கண்டி, திகன விடயத்தில் மஹிந்த.!

நாட்டில் இடம்­பெறும் விரும்­பத்­த­காத சில சம்­ப­வங்கள் தொடர்பில் அனை­வரும் தமக்­குள்ள பொறுப்­பினை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டுமென  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார். 

கண்டி, திகன பகு­தியில் நடை­பெற்ற வன்­மு­றைகள் தொடர்பில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்துள்ளாா். 

இது தொடர்பாக மேலும் தெரிவி க்கையில்...

இப்படியான வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்­து­வதில் பொலி­ஸா­ரி­டமும் சில குறை­பா­டு­களை காண­மு­டி­கி­றது. இந் நிலைமை ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. யாராக இருப்­பினும் தமக்­குள்ள பொறுப்­பினை உணர்ந்து இவ்­வா­றான சம்­ப­வங்களின் போது செயற்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.