ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழுவின் அவசர சந்திப்பு இன்று.!
கூட்டு எதிர்க்கட்சியினரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஐக்கிய தேசிய கட்சி யின் செயற்குழு இன்று கூடி ஆராய உள்ளதாக அமைச்சர் கயந்த கருணா திலக தெரிவித்துள்ளாா்.
கட்சியின் மறுசீரமைப்பு விடயங்க ளும் முக்கியத்துவத்துடன் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பி ட்டார். அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன் கிழமை அரசாங்க தக வல் திணைக்களத்தில் நடைபெற் றது.
அவ்வேளை அமைச்சர் கயந்த கருணாதிலக மேற்கண்டவாறு மேலும் தெரிவிக்கையில்.......,
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூடி பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆராய்ந்துள்ளது. இதன் போது கட்சி என்ற வகை யில் அதனை தோல்வியடைய செய்வதற்கு அனைவரும் ஒன்றிணைவதாக உறுதியளித்துள்ளனர்.
இன்று கட்சியின் செயற்குழு கூடி நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஆரா ய்ந்து எவ்வாறாயினும் கட்சியின் மறுசீரமைப்பு குறித்து பேச்சுக்களை முன்னெடுத்துள்ளோம்.
தலைமைத்துவ விடயம் மாத்திரம் அல்ல ஏனைய பதவி நிலைகள் மற்றும் அவற்றின் அதிகாரங்கள் குறித்தும் பரந்தளவில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலைமையில் உள்ளோம்.
அதன்பின் கட்சியின் மறுசீரமைப்பு குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.
ஆனால் நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்திற்கு முன்னுரிமை கொடு த்து அனைத்து உறுப்பினர்களும் செயற்படுகின்றனர். கட்சிக்குள் இருந்து கொண்டு எதிராக செயற்படுபவர்கள் குறித்து கவனத்தில் எடுக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.