நல்லிணக்கத்திற்காக அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும் - ஜெனிவாவில் திலக் மாரப்பன.!
இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று ஜெனிவா மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ளாா்.
ஜெனிவா மனித உரிமை பேரவை யில் நேற்று நடைபெற்ற இலங்கை ஜெனிவா பிரேரணையை எவ்வாறு அமுல்படுத்தியது என்பது குறித்தான விவாதத்தில் இலங்கையின் சார்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.
ஜெனிவா மனித உரிமை பேரவை யில் நேற்று நடைபெற்ற இலங்கை ஜெனிவா பிரேரணையை எவ்வாறு அமுல்படுத்தியது என்பது குறித்தான விவாதத்தில் இலங்கையின் சார்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.
2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டு பின்னர் 2017 ஆம் ஆண்டு இரண்டு வருட கால நீடிப்புக்குள்ளான பிரேரணையை இலங்கை அரசாங்கம் எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது குறித்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனின் அறிக்கை மீதான விவாதமே இவ்வாறு நடைபெற்றுள்ளது.
திலக் மாரப்பன தனது உரையில் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
நான் அமை ச்சர்களான சரத் அமுனுகம மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோருடன் வந்தி?ருக்கின்றேன். இலங்கையில் சட்டம் ஒழுங்கு சரியாக செயற்படுகிறது. மனித உரிமை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
காணாமல் போனோர் குறித் து ஆராய அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. 70 வீதமாக காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. நட்ட ஈடுகள் வழங்கும் அலுவலகம் அமைக்கப்படவுள்ளது. உண்மையை கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்படவுள்ளது.
பயங்கரவாதம் தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டமூலம் கொண்டு வரப்படும். அண்மைய காலங்களில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில் கவலை அடைகிறோம். இதன் பின்னர் இவ்வாறு வன்முறைகள் ஏற்பட இடமளிக்க மாட்டோம்.
இலங்கையில் அனைவரும் சமஉரிமையுடன் வாழ உரிமையுள்ளது. 2015ஆம் ஆண்டு ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்த நடவடிக்கைகளை முன்னெடு த்துள்ளோம்.