அவசர கால சட்ட நீக்கத்திற்கான வர்த்தமானியில் கையொப்பமிட்ட ஜனாதிபதி.!
ஜப்பானிலிருந்து நேற்றிரவு நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, நாட்டில் நிலவும் அவசர கால நிலைமையை நீக்குவதற்கான வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை விடுத்துள்ளது.
கண்டியில் நடைபெற்ற வன்முறை களையடுத்து நாட்டின் தேசிய பாது காப்பு காரணமாக கடந்த 7ம் திகதி முதல் நாட்டில் அவசரகால சட்டம் அமுலாக்கப்பட்டிருந்தது.
இந்நிலை யில் குறித்த அவசரகால சட்டத்தை ரத்துச் செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி நேற்று இரவு கையொப்பமிட்டுள்ளார்.