வல்வெட்டித்துறையிலும் ஈ.பி.டி.பி,சு.க உடன் கூட்டமைப்பு கூட்டாட்சி
ஈபிடிபி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் வல்வெட்டித்துறை நகர சபையினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது.
வல்வெட்டித்துறை நகர சபை முதலாவது அமர்வு இன்றைய தினம் (27) உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் கூடியது.
அதன் போது தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு கோணலிங்கம் கருணானந்தராஜாவை பிரேரித்தனர்.
மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழுவினர் சபாரட்ணம் செல்வேந்திரனைப் பிரேரித்தனர்.
அதனை அடுத்து பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் 6 உறுப்பினர்களும் ஈழமக்கள் ஜனநாய கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினரும் கோணலிங்கம் கருணானந்தராஜாவுக்கு வாக்களித்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரு உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உறுப்பினரும் நடுநிலமை வகித்தனர். வாக்களித்தனர்.
மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழுவினர் சபாரட்ணம் செல்வேந்திரனுக்கு அச் சுயேட்சைக் குழுவின் 4 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
அதனை அடுத்து 9 உறுப்பினர்களின் ஆதரவுடன் கோணலிங்கம் கருணானந்தராஜா தவிசாளாரக தெரிவானர்.
இந் நிலையில் உப தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆறுமுகம் ஞானேந்திராவை பிரேரித்தது. ஏனைய கட்சியினர் எவரையும் பிரேரிக்காத நிலையில் ஆறுமுகம் ஞானேந்திரா உப தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனை அடுத்து வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் கோணலிங்கம் கருணானந்தராஜா சபையை ஒத்திவைத்தார்.