கிளி கண்டாவளை பிரதேச செயலர் நாகேஸ்வரன் மாரடைப்பால் மரணம்
கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலர் நாகேஸ்வரன்
மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவருக்கு கடமை நேரத்தில் மாரடைப்பு வந்துள்ளது. உடனடியாக தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் கொண்டு செல்லும் போதே இறந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் சில மாதத்திற்கு முன்னர் கரைச்சி பிரதேச செயலகத்தில் இருந்து இடமாற்றம் பெற்று கண்டாவளை பிரதேசத்தில் கடமையாற்றி வந்துள்ளதாகவும், இவருக்கு மாரடைப்பு காரணமாக தான் இறந்துள்ளார் என்பதும் தெரியவருகிறது.