"பிரதமர் பதவிக்கு நானே தகுதியானவன்" - அமைச்சா் ஜோன் அமரதுங்க.!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அடுத்ததாக நானே அதிக காலம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றேன். ஆகவே நானே பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதியானவன். எனினும் அந்த பதவியை நான் எதிர்பார்க்கவில்லை என சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
வத்தளை பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
சட்டம் ஒழுங்கு அமைச்சராக நான் இருந்துள்ளேன். ஆகையால் குறித்த பதவியை நான் தொடர்ந்து எதிர்பார்க்க மாட்டேன். தற்போது நான் சுற்றுலா அமைச்சு பதவியை வகிக்கின்றேன். ஆகவே எனக்கு அமைச்சு பதவிகள் ஒன்றும் அவசியமில்லை.
அப்படியாயின் நான் பிரதமர் பதவிக்கே தகுதியானவன். ஏனெனில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அடுத்ததாக நானே அதிக காலம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றேன். என்றாலும் அந்த பதவியை நான் எதிர்பார்க்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளாா்.