ஜனாதிபதியும் பிரதமருமே இது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும்
சட்டம் ஒழுங்கு அமைச்சினை பொறுப்பேற்பதற்கு பொருத்தமானவர்கள் இன ங்காணப்படாமையினாலேயே அதனை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறு ப்பேற்றுள்ளார்.
அதனை அடுத்து யாருக்கு வழங்க வேண்டுமென இன்னும் தீர்மானிக்க ப்படவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரி வித்தார்.
சட்டம் ஒழுங்கு அமைச்சு பதவி தொடர்பில் நிலவுகின்ற கரு த்தாடல்கள் தொடர்பில் குறிப்பிடுகை யிலேயே இவ்வாறு தெரிவித்தாா்.
மேலும் தெரிவித்ததாவது,
அமைச்சரவை அமைச்சுக்க ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு வகையான கருத்துக்களை முன்வைத்து க்கொண்டிருக்கின்றனர்.
அவற்றின்படி சட்டம் ஒழுங்கு அமைச்சு பதவி தொடர்பாக பரவலான கருத்து க்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வமைச்சை முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேக்காவுக்கு வழங்கலாம் என்ற வகையிலான கருத்துக்கள் நிலவுகின்றன.
ஆனால் இது தொடர்பில் இது வரையில் எந்த தீர்மானங்களும் எடுக்கப்பட வில்லை. அதேவேளை சரத் பொன்சேக்காவுக்கு வழங்குதல் தொடர்பான எந்த வித பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை.
சட்டம் ஒழுங்கு அமைச்சினை பொறுப்பேற்கக்கூடிய அதற்கு பொருத்தமான வர்கள் இனங்காணப்படும் பட்டசத்தில் அவர்களுக்கு எதிர்காலத்தில் அப்பதவி வழங்கப்படலாம். அது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரே தீர்மானிக்க வேண்டும். அதனை ஐக்கிய தேசிய கட்சியோ அல்லது சுதந்திர கட்சியோ தனித்து தீர்மானிக்க முடியாதெனத் தெரிவித்துள்ளாா்.