Breaking News

இலங்கையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட முதலாவது உள்ளூர் விமான நிலையம்!

இலங்கையின் முதலாவது உள்நாட்டு விமான சேவை மட்டக்களப்பு விமான நிலையத்திலிருந்து நேற்று ஆரம்பித்து வைத்துள்ளனா்.

போக்குவரத்து, விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பல அதிகாரிகள் உள்ளிட் டோரை ஏற்றிய பயணிகள் விமானம் நேற்று மட்டக்களப்பு விமான நிலை யத்தை சென்றடைந்தது. சிவில் விமான சேவைகள் அதிகார சபை யின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி நிமல சிறியினால், உள்நாட்டு விமான வழிநடத்தல் சேவைக்கான அனுமதி ப்பத்திரம், விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் சமன் எதிரிவீரவிடம் வழங்கப்பட்டுள்ளது. 

1488 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்ட ஓடு பாதையைக் கொண்டதாக மட்டக்களப்பு உள்நாட்டு விமான நிலையம் அமைந்துள்ளதுடன். இலங்கை யில் திறந்து வைக்கப்பட்ட நான்காவது விமான நிலையம் என தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

கட்டுநாயக்கா மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களுடன் இரத் மலான விமான நிலையமும் இதற்கு முன்னர் இலங்கையில் செயற்பட்டு வருகின்றது. இந்த விமான நிலைய புனரமைப்பிற்காக 1400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.

இரத்மலானையிலிருந்து மட்டக்களப்பிற்கான பயணிகள் விமான சேவையை முன்னெடுப்பதற்காக, சில தனியார் விமான சேவைகள் விருப்பம் தெரிவித்து ள்ளதாக போக்குவரத்து அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இவ்விமான நிலையத்தினூடாக கொழும்புக்கான விமான சேவைகள் தின மும் இடம்பெறுமென மட்டக்களப்பு விமான நிலைய முகாமையாளர் சிந்தக பொன்சேகா தெரிவித்தார். விமான நிலைய வளாகத்தில், விமான பயிற்சி பாடசாலையொன்றை ஆரம்பிப்பதற்கும் போக்குவரத்து அமைச்சு திட்ட மிட்டுள்ளது.