அச்சுறுத்தல் காரணமாக தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி சடலமாக மீட்பு
யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தில் பணியாற்றிய இளம் பெண் ஒருவர் கடித மொன்றை எழுதிவைத்து விட்டு தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடல மாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நகேஸ்வரன் கௌசிகா (வயது 23) என்ற இளம் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவரா வார்.
குறித்த பெண் யாழ்.மருதடியி லுள்ள நண்பியின் வீட்டில் தங்கி வாழ்ந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத வேளையில் பிற்பகல் தூக்கு ப்போட்டு தற்கொலை செய்துள்ள தாக உறவினர்கள் தெரிவித்துள்ளனா். இவர் கடந்த வருடம் பேராதெனியா பல்கலைக்கழகத்திற்கு தெரிவான போதிலும் வீட்டுச் சூழ்நிலை காரணமாக பல்கலைக்கழகம் செல்லவில்லை என குடும்பத்தினர் தெரிவிப்பதோடு. இப் பெண் தற்கொலை செய்வதற்கு முன்னர் எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றை யாழ். பொலிஸார் கைப்பற்றியதுடன் அது தொடர்பில் விசாரணை களை முன்னெடுத்துள்ளனா்.
அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாவது, பல்வேறு ஊழல்கள் தொடர்பான விட யங்களில் சட்டத்தரணி ஒருவர் தன்னை கட்டாயப்படுத்தி வந்ததாகவும் பெரும் தொகையான பணத்தை தாம் திருடி விட்டதாகவும் தெரிவித்து, தம்மை அச்சுறுத்துவதாக தெரிவித்துள்ளாா்.
ஆகவே தான் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்ததாகவும் யுவதி எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சடலம் பிரேத பரிசோதனை க்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக குறித்த சங்க அங்கதவர்களிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.