ஜனாதிபதி இன்று பாகிஸ்தான் விஜயம்.!
பாகிஸ்தான் குடியரசு தின கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைனின் விசேட அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அந்நாட்டுக்கு விஜயம் ஆகவுள்ளாா்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான நட்புறவை நினைவுகூரும் வகையில் ஜனாதிபதி இந்த நிகழ்வில் கலந்துகொள்வதுடன், அண்மைக் கால த்தில் இலங்கையின் அரச தலைவர் ஒருவருக்கு இதுபோன்றதொரு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென ஜனாதிபதிச் செயலகம் விவரித்துள்ளது.
இம்முறை குடியரசு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அமோக வரவேற்பளிப்பதற்காக பாகிஸ்தான் அரசாங்கம் சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைன் மற்றும் பிரதமர் சஹீத்கான் அப்பாஸ் ஆகியோரையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.
இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் கல்வி ஆகிய துறைகளில் உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறி த்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
மேலும் ஜனாதிபதியின் இவ் விஜ யத்தின்போது இருநாடுகளுக்கிடையில் கல்வி மற்றும் சுற்றுலா துறையில் நான்கு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.