Breaking News

ஜனா­தி­ப­தி தொடர்பில் எதிர்க்­கட்சி தலைவர் - இரா. சம்­பந்தன்

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காணும் ஆர்வம் ஜனா­தி­ப­திக்கு உள்­ளது என்­பதை நன்­றாக அறிவோம்.

ஆனால் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களில் தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுப்­பதில் இருக்கும் சவால்­களை சமா­ளிக்க வேண்­டி­யுள்­ளது. எனினும் சவா ல்­களை சமா­ளித்து தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­தர தீர்­வு­களை பெற்­று­கொ­டுக்க வேண்டும் என எதிர்க்­கட்சி தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்தார்.

பிரி­ப­டாத ஒன்­றி­ணைந்த நாட்­டுக்குள் தீர்­வு­களை பெற்­றுக்­கொள்­ளவே தமிழ் மக்கள் முயற்­சித்து வரு­கின்­றனர் எனவும் அவர் குறிப்­பிட்டார். யாழ்ப்­பாணம் புனித பத்­தி­ரி­சி­ய­ரியார் கல்­லூ­ரியில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட தொழில்­நுட்ப கூட திறப்­பு­விழா நிகழ்வில் நேற்று கலந்­து­கொண்டு உரை­யாற்றுகையில்.....

எமக்கு சுதந்­தரம் கிடைத்த பின்னர் நாட்டின் அனைத்து தமிழ், சிங்­கள, முஸ்லிம் மக்கள் இணைந்து சுதந்­த­ரத்தை வர­வேற்றோம். எம் அனை­வ­ரதும் எதிர்­பார்ப்­பு­களும் ஒன்­றா­கவே அமைந்­தன. 

சுதந்­த­ரத்தின் பின்னர் தமிழ் மக்கள் தமக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்­கை­யினை முன்­வைக்­க­வில்லை. தங்­க­ளது பிரச்­சி­னையை தனி­நாட்­டுக்குள் பிரிக்க முடி­யாத ஐக்­கிய இலங்­கைக்­குளே தீர்க்­கவே தமிழ் மக்கள் விரும்­ப­கின்­றனர். தமிழ் மக்­களும் சமூக, பொரு­ளா­தார அந்­தஸ்­துக்­களை பெற்று இந்த நாட்­டினை ஒன்­றி­ணைந்து முன்­னெ­டுத்து செல்­லவே விரும்­பு­கின்­றனர்.

ஆனால் இந்த கோரிக்கை தொடர்ந்த வண்­ணமே இருந்­தது. 1972 ஆம் ஆண்டு அர­சியல் அமைப்பில் தமிழ் மக்­களின் உரி­மைகள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டன. அதன் பின்­னரே நிலை­மைகள் மாற்றம் பெற்­றன. அதனை அடிப்­ப­டை­யாக கொண்டே 30 ஆண்­டு­கால யுத்தம் நில­வி­யது, இது நாட்டில் பாரிய நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யது. 

பிரச்­சி­னை­களை தீர்க்க இந்­தியா தலை­யிட்­டது, ஏனைய சர்­வ­தேச நாடு­களின் தலை­யீ­டுகள் காணப்­பட்­டன. எனினும் யுத்­தத்தின் பின்­னரும் பல்­வேறு பிரச்­சி­னைகள் நில­வு­கின்­றது. தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வில்லை. யுத்­தத்தின் பின்­னரும் பல்­வேறு மாற்­றங்­க­ளுக்கு பின்­னரும் தமிழ் மக்­களின் விட­யத்தில் நெருக்­க­டி­களே நில­வு­கின்­றன. 

எனினும் எமது பிரச்­சி­னை­களை பிரி­ப­டாத ஒன்­றி­ணைந்த நாட்­டுக்குள் பெற்­றுக்­கொள்­ளவே நாம் முயற்­சித்து வரு­கின்றோம். இந்த ஆட்­சி­யா­ளர்கள் வாக்­கு­று­தி­களை கொடுத்து ஆட்­சிக்கு வந்­தனர். அதனால் தான் தமிழ் மக்­களின் பூரண ஆத­ரவு ஜனா­தி­ப­திக்கு கிடைத்­தது. 

தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்க அர­சாங்கம் தயா­ராக உள்­ளது என்­பது எமக்குத் தெரியும். ஜனா­தி­பதி தீர்வு குறித்து செயற்­ப­டு­கின்­றனர் என்­பது எனக்கு நன்­றாக தெரியும். இந்த நாட்டில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஜனா­தி­பதி அவ­ருக்கு உள்­ளது. 

இந்த அர­சாங்­கத்­திற்கும் உள்­ளது என்­பதை நான் நன்­றாக அறிவேன். ஆனால் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களில் தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுப்­பதில் அவ­ருக்கு இருக்கும் சவால்­களை சமா­ளிக்க வேண்­டி­யுள்­ளது.எனினும் சவால்­களை சமா­ளித்து தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­தர தீர்­வு­களை பெற்­று­கொ­டுக்க வேண்டும் என நாம் எதிர்­பார்க்­கின்றோம். 

தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்கு உங்­களால் முடியும். அதனை நீங்கள் செய்ய வேண்டும். அப்­ப­டி­யாக நீங்கள் அந்த கரு­மத்­தினை நிறை­வேற்­று­கின்ற போது சர்­வ­தேச அளவில் நீங்கள் போற்­றப்­ப­டு­வீர்கள். சர்­வ­தேச அளவில் உங்­க­ளுக்­கான மதிப்பும் அங்­கீ­கா­ரமும் பல­ம­டையும். 

இந்த நாட்டின் பொரு­ளா­த­ரத்தை மீண்டும் பின்­ன­டை­வக்கை நாட்­டினை நெருக்­க­டிக்கு உள்­ளாக்கும் நகர்­வு­களை நாம் தவி­ருத்­து­கொள்ள வேண்டும். எமது நாட்டின் பொரு­ளா­த­ரத்தில் தொழி­நுட்ப கல்வி முறைமை மிகவும் அவ­சி­ய­மாக கரு­தப்­பட வேண்டும். 

இன்று உலக நாடு­களின் பொரு­ளா­தார இஸ்­தி­ரத்தில் தொழி­நுட்ப கல்­வியும் அதன் மூல­மான நகர்­வு­க­ளுமே முக்­கிய இடை­தினை வகிக்­கின்­றது. ஜெர்­மனி உலகின் மிகவும் பல­மான பொரு­ளா­தார கொள்­கை­யினை கொண்­டுள்ள நாடாகும். நீண்ட யுத்தம் ஒன்­றுக்கு முகங்­கொ­டுத்து நெருக்­க­டிகள் மிக்க நாடக இருந்த ஜெர்மனி இன்று முன்னேற்றகர பொருளாதார கொள்கையினை கொண்டுள்ளது. 

அதற்கு அந்த நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் மற்றும் தொழில் பெற்றைகளின் உருவாக்கவே இதற்குக் காரணமாகும். சிறிய குடும்ப ங்களாக இவை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக அவர்களின் பொரு ளாதரத்தில் அது தாக்கம் செலுத்தியது. தொழில்நுட்பவியல் வளர்ச்சி தேசிய பொருளாதரத்தில் பாரிய ஒத்துழைப்பினை வழங்குகின்றது.