சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டதற்கு சர்வதேச ரீதியிலும் எதிர்ப்பு!
கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து சமூக வலை த்தளங்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் முடக்கியமைக்கு எதிராக உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேசத்திலிருந்தும் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன.
எனினும் தற்காலிகத் தடையை எதி ர்வரும் வெள்ளிக்கிழமை அகற்ற விருப்பதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளாா்.
மேலும் சமூக வலைத்தளங்கள் மீதான இந்த நீண்டநாள் தடையானது சர்வதேச அரங்கில் ஸ்ரீலங்கா மீது உள்ள நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுகின்ற விடயமாகுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளம் மீதான தடைக்கு எதிராக பொங்கியெழுந்த சர்வதேசம்!
ஸ்ரீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஹத்துல் கேஷாப் தனது ருவிட்டர் தளத்தில் இவ் விடயத்தை தெரிவித்துள்ளாா்.
ஸ்ரீலங்காவுடன் சர்வதேச அரங்கில் இருப்பவர்கள் தொடர்புகொள்கின்ற ஒரே யொரு வழியாக சமூக வலைத்தளம் காணப்படுகின்ற நிலையில் அதன் மீது இவ்வாறு விதிக்கப்பட்டுள்ள நீண்ட நாள் தடையானது எவ்வகையிலும் ஏற்க முடியாதென மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே Viber தடை கடந்த இரவிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பி டத்தக்கது.