முல்லைத்தீவில் மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு.!
முல்லைத்தீவு நகரில் முன்னெடுக்கபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்க ளின் உறவுகளின் போராட்டம் எதிர்வரும் 8ஆம் திகதியுடன் ஒரு வருடத்தை எட்டவுள்ளது.
இதனை முன்னிட்டு, ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 10 மணிக்கு மாபெ ரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றி னை காணாமல் ஆக்கப்பட்டவர்க ளின் உறவினர்களால் முல்லை த்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்படும்.
இந்நிலையில் போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரதும் ஆதரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்தி ப்பில் முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
அங்கு கருத்து வெளியிட்ட அவர்,
இதுவரைக்கும் இந்த வீதியில் இருந்து போராடி எந்த பலனும் கிடைக்கவில்லை அரசுடன் மறைமுகமாகவும் நேரடி யாகவும் பேச்சுக்களில் ஈடுபடும் எந்த பலனும் கிடைக்கவில்லை. தற்போது ஜெனீவா அமர்வு இடம்பெற்றுவரும் நிலையில் அங்கும் எமது பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இருந்தும் இங்கே எமது போராட்டத்தால் எந்தவித பலனும் இல்லை அதனால் எமது ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு ஐ.நாவின் கவனத்துக்கும் சர்வ தேச த்தின் கவனத்துக்கும் எமது பிரச்சனையை காட்டிட வேண்டிய தேவை எழு ந்துள்ளது.
எனவே, இன மத பேதம் இன்றி அனைவரும் எமக்காக இந்த போராட்டத்தில் இணைந்து கொண்டு எமது பிரச்னையை சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல உதவி கோரி நிற்கின்றோம்.
மனித உரிமை அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர் சமூகம், மதகுருமார்கள், இளைஞர் யுவதிகள் அனைவரும் எமது போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு எதிர்வரும் 8ஆம் திகதி வருகைதந்து எமது போரா ட்டத்தை வலுப்படுத்த கைகோர்க்குமாறும் வேண்டுகை விடுத்துள்ளாா்.