Breaking News

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மாற்றம் அவசியம் - ரவீந்திர சமரவீர.! (காணொளி)

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பாரிய மறு சீரமைப்பொன்றை மேற்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுவதாக வனஜீவராசிகள் மற்றும் நிலையான அபிவிருத்தி அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலை வரும், பிரதமருமான ரணில் விக்கிர மசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையி ல்லாத் தீர்மானம் கொண்டுவர முய ற்சிகள் இடம்பெற்று வரும் நிலை யில் அக்கட்சியின் மூத்த உறுப்பின ரான அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரி வித்துள்ளாா். 

கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது வனஜீவராசிகள் மற்றும் நிலையான அபிவிருத்தி அமைச்சரான நியமிக்கப்பட்ட ரவீந்திர சமரவீர, இன்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள அமைச்சில் சமய வழிபாடு களைத் தொடர்ந்து கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். 

 இந் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாஸ உட்பட அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும், தொழிற்துறை அமைச்சருமான ஜோன் செனவிரத்னவும் இந் நிகழ்வில் பிரசன்னமாகியி ருந்தார். 

கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு கட்சியின் தலைவரும், ஸ்ரீலங்கா பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவே காரணம் என்று சுட்டிக்கா ட்டுகின்ற அக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதம ருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டவண்ணமுள்ளனா். 

இந்த நிலையில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் அமை ச்சர் ரவீந்திர சமரவீரவிடம் ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினா எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த அமைச்சர் ரவீந்திர சமரவீர “1988ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினரான தெரிவாகி கட்சியின் வளர்ச்சிக்காக செயற்பட்டுவரும் எனக்கு அதன் பிரதிபலன் இப்போதுதான் கிடைத்திருக்கிறது. 

ஆனால் எனக்குப் பின்னே வந்த பலர் நான் சாதாரண நாடாளுமன்ற உறுப்பின ரான இருந்த காலத்திலும்கூட அவர்கள் அமைச்சரவை அமைச்சராக பதவி வகித்தனர். எனவே நான்தான் ஏனையவர்களை விடவும் அதிகமான கலக்க த்தில் இருக்க வேண்டியவன். 

கட்சிக்குள் சஞ்சலமடைந்து, கலக்கத்தில் இருப்பவர்கள் தெளிவுபெற நானே சிறந்த உதாரணம். கட்சிக்குள் பிரச்சினை இல்லை என்று நான் கூறமுடியாது. கட்சிக்குள் மிகப்பெரிய மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை கடந்த தேர்தலில் மக்கள் தெளிவுபடுத்தினார்கள். 

வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை 2015ஆம் ஆண்டில் நாங்கள் செய்திரு ந்தோம். அதன்படி அந்த மாற்றத்தின் பிரதிபலன்களும், எதிர்பார்ப்பு க்களும் எம க்கு கிடைக்கவில்லை என்றால் விலகுவதை தவிர வேறொன்றும் இல்லை. இதற்கமையவே அந்த மாற்றங்களை மேற்கொள்ள கட்சி முற்படுகிறது. 

அது எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுபற்றி பேச்சு நடத்தப்படு கிறது” என்றார். இதேவேளை இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா சுத ந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும், தொழிற்துறை அமைச்சருமான ஜோன் செனவிரத்ன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட வுள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக தமது கட்சி இன்னும் இறுதிமுடிவு எடுக்கவில்லை.

“ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே அதன் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற அதிர்வலை ஏற்பட்டிருக்கிறது. எதிர்கட்சியிருந்து அல்லாமல் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே இருந்து இத் தீர்மானம் வருவது சிந்திக்கவேண்டிய விடயமாகும். 

கட்சிக்குள் நடைபெறும் விடயங்களில் நாங்கள் பங்காளிகளாக முடியாது. ஒன்றிணைந்த எதிர்கட்சி இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கும் என்று கூறியிரு க்கின்றது. எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதுதொடர்பில் தீர்மானம் எடுக்க வில்லை. 

எதிர்காலத்தில் அப்படியொரு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்ப ட்டால் அதுதொடர்பில் நாங்கள் ஆலோசிப்போம்” என்று கூறினார். இதே வேளை ஊடகங்களுக்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜோன் செனவிரத்ன கிராமிய மட்டங்களின் ஆட்சியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழிநடத்துகின்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பெற்றிருப்பதால் அவர்களை சுதந்திரக் கட்சியுடன் இணைத்து பயணிப்பதே சுதந்திரக் கட்சியின் இலக்கு எனத் தெரிவித்துள்ளாா். 

இதற்கான முயற்சிகள் பேச்சுவார்த்தைகளின் ஊடாக கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லையெனத் தெரிவித்த அவர், இதுகுறித்து தொடர்ந்தும் பல பேச்சுக்கள் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளாா்.