வெள்ளை மாளிகைக்கு வெளியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை !
அமெரிக்கா - வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகைக்கு வெளியில் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளாா்.
நேற்று வெள்ளை மாளிகைக்கு அருகே வந்த நபர் ஒருவர் தான் தற்கொலை செய்வதற்கு முன்பாக அங்கிருந்தவர்களை நோக்கி சர மாரி யாக துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக வும் அதன்பின் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் வெள்ளை மாளிகை பொலிஸார் தகவல் வட்டாரங்களுக்குத் தெரிவித்துள்ள னர்.
மேலும் இச் சம்பவத்தின் போது ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் புளோரிடாவில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்ப வம் தொடர்பாக தற்கொலை செய்து கொண்ட நபரின் பெயரை வெளியிட பொலிசார் மறுத்து விட்டனர்.
இத் துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை, இது குறித்து வாஷிங்டன் பொலிஸார் விசாரணைகளை முன்னெ டுத்து வருகின்றனர்.