Breaking News

கண்டி கலவரத்தினால் ஜனாதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு.!

நாட்டில் ஒரு சில பகுதிகளில் ஏற்பட்ட திருப்தியற்ற பாதுகாப்பு நிலைமை யைத் தவிர்ப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன் அவசர கால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

குற்றவாளிகள் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரை வலுப்படுத்துவதற்காக இந்த நடவடி க்கை எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி யின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. 

கண்டி - திகன, தெல்தேனிய பிர தேச த்தில் நேற்று நடைபெற்ற வன்முறையை அடுத்து நேற்றைய தினம் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் பல்லேகல மற்றும் தெல்தெனிய ஆகிய பகுதிகளில் இன்று மாலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.