Breaking News

3 பிள்ளைகளின் தந்தை ரயிலுடன் மோதி பலி - கிளிநொச்சியில்.!

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் நடைபெற்றுள்ளது.

பரந்தன் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் உள்ள உமையாள்புரம் செல்லும் வீதியிலு ள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை மோட்டார் சைக்கிளில் சென்ற நபரொ ருவர் கடந்து செல்ல முற்பட்ட வேளை இவ் விபத்து நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி கண்ணகியம்மன் கோவிலடி மலையாளபுரத்தைச் சேர்ந்த 36 வய துடைய 3 பிள்ளைகளின் தந்தையான மாரிமுத்து நாகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளாா். 

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதியே குறித்த நபர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக கிளி நொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.