அவசரமாக ஒத்தி வைப்பு ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம்.!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கையளிக்கும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து உரையாற்றிய ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பி னரான ரஞ்ஜித் டி சொய்ஸா இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
பிரதமருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு தயா ரிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று சமர்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டிருக்கும் அமைதி யின்மை காரணமாக இத் தீர்மானம் பிற்போடப்பட்டிருப்பதாக தெரிவித்து ள்ளாா்.