இந்தியா திறந்த பூப்பந்து போட்டியில் சிந்து அரையிறுதிக்கு தகுதி
இந்தியாவின் திறந்த பூப்பந்து போட்டியில் நடப்பு சம்பியன் சிந்து காலிறுதி ஆட்டத்தில் வெற்றி ஈட்டியுள்ளார். இந்தியாவின் திறந்த பூப்பந்து போட்டிகள் டெல்லியில் ஆரம்பமாகியுள்ளன.
இப் போட்டியில் உலக தரவரிசையில் முன்னணியில் உள்ள பல வீரர்கள் கலந்துள்ளனர். இந்நிலையில் இப் போட்டிகளுக்கான காலிறுதி போட்டி கள் நேற்று நடைபெற்றன. இதனடிப்ப டையில் நேற்று நடைபெற்ற காலி றுதி போட்டி ஒன்றில் இந்தியாவின் நடப்பு சம்பியன் பிவி சிந்துவும் ஸ்பெயினின் பீட்ரீஸ் கோரலெஸ்சும் மோதி யுள்ளனர். இருவருக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் முதல் சுற்றில் 21 ற்கு 12 என்ற கணக்கில் வெற்றி பெற்ற சிந்து, 2 ஆவது சுற்றில் 21 ற்கு 19 என்ற கண க்கில் கோரலெஸ்சிடம் தோல்வியடைந்துள்ளார்.
இந்நிலையில் அதனை தொடர்ந்து இடம்பெற்ற வெற்றியை தீர்மானிக்கும் இறுதி சுற்றில் 21 ற்கு 11 என்ற கணக்கில் சிந்து வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.