புலிகள் காலத்தில் இது நடக்கவில்லையாம் - நெடுமாறன்.!

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, கவிஞர் காசி ஆனந்தன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா,
எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் தெஹலான் பாகவி, மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, இயக்குநர் அமீர், தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்களும், சட்டப் பேராசிரியர்களுமான யொரெம்பே முடும் மற்றும் மாலேம் மங்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் தமிழீழ விடுதலை பற்றி உரையாற்றினார்கள்.
மாநாட்டில் பேசிய கவிஞர் காசி ஆனந்தன், "தமிழீழத்தை மீட்டெடுக்க வேண்டுமானால், உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் அமைப்புகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.
சாதி, மதம் என்பதை மறந்து நாம் அனைவரும் ஒரே இனம் என்ற எண்ணத்தில் போராடினால் மட்டுமே தமிழீழம் சாத்தியமாகும்" என்றார்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியபோது, "ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று ஏற்க மறுப்பவர்களும், புலிகளுக்கு ஆதரவு அளிக்காதவர்களும் இந்த தமிழ் மண்ணில் நிலைத்து நிற்க முடியாது.
எம்மினம் அழிந்தபோதும், எம்மினத்தை பிற மாநிலக்காரர்கள் தாக்கிய போதும் வாய் திறக்காதவர்கள் எல்லாம் இன்று எம்மினத்தை ஆள நினைக்கிறார்கள். அவர்களுக்கு என்ன தைரியம் இருக்கிறது?
வெட்கப்பட்டு கொள் தமிழினமே" என்றார்.
மாநாட்டில் திருமுருகன் காந்தி பேசியதாவது" 'வெல்லும் தமிழீழம்' என்ற இந்த முழக்கத்தைச் சொல்லும் போது இந்திய அரசு அஞ்சுமேயானால், மீண்டும் மீண்டும் சொல்வோம் 'வெல்லும் தமிழீழம்' என்று.
இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் இனப்படுகொலை நடந்து விட்டது என பேசப்போகிறோம். வெறும் சமூக வலை தளங்களில் படங்களை பகிர்வதோடு நம்முடைய கடமை நின்றுவிடக் கூடாது. அடுத்து என்ன செய்தால் தமிழீழம் மலரும் என்று சிந்தித்து அடுத்த கட்டத்துக்குச் செல்லவேண்டிய கட்டாய த்தில் நாம் உள்ளோம்.
எப்படி காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் விவாதப் பொருளாக மாறியதோ? அதுபோல் தமிழீழமும் இந்தியாவின் விவாதப் பொருளாக மாற வேண்டும். அதற்கான முயற்சியை நாம் தான் எடுக்க வேண்டும். இந்தியாவிலுள்ள தேசிய இனத் தலைவர்கள், பல தேசிய இனமக்கள், இந்திய ஊடகம் என அனைத்துத் தரப்பினரும் தமிழீழத்தை விவாதப் பொருளாக எடுக்க வேண்டும்.
அப்போதுதான் இந்திய மக்களுக்கு இலங்கையில் நடந்த இனப்படுகொலை தெரியும். இந்தியா என்ற ஒரு நாடு இனத்துக்கு செய்த மிகப்பெரிய துரோக த்தை இந்திய மக்கள் மட்டுமல்ல...
தெற்காசிய நாடுகளிலுள்ள அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த 9 வருடங்களாக தமிழர்கள் குற்ற உணர்ச்சியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தியா முழுவதும் தமிழீழத்தை விவாதப் பொருளாக மாற்ற முடியவில்லை. இது நடக்க வேண்டும்.
அப்போதுதான் இந்தியாவுக்கு எதிராக தமிழினத்துக்கு ஆதரவாக பல தேசிய இனங்கள், பல நாடுகள் ஒன்று சேரும். செனல்- 4 எடுத்த ஆவணப்படத்தை தவிர நம்மிடம் என்ன ஆவணம் இருக்கிறது?
நம்மிடம் திறமையான கலைஞர்கள் இல்லையா? லுஸ்கர் வாங்கும் அளவுக்கு திரைத்துறையில் சாதித்து இருக்கிறோம். ஆனால், நம்மினம் பற்றிய ஒரு ஆவணப்படம் இல்லை. வரலாற்றைத் தெரிந்துகொண்டும் நாம் அதனை ஆவணப்படுத்தவில்லை என்றால், எவனோ ஒருவன் அவன் விருப்பத்துக்குத் தமிழினத்துக்கு தலையங்கம் எழுதி விடுவான்.
தமிழகமே எழுச்சி கொள். இல்லையென்றால் இன்று தமிழீழத்துக்கு நடந்தது, நாளை தமிழ் நாட்டுக்கும் நடக்கும்!" என்று முழங்கினார்.
பின்னர் பேசிய பழ.நெடுமாறன் "புலிகள் இருந்தவரை இந்துமாக் கடலை எந்த நாட்டாலும் கைப்பற்ற முடியவில்லை. இன்று நிலைமை அப்படியல்ல. இந்துமாக்கடல் சீனாவின் கட்டுக்குள் சென்றுவிட்டது. இந்தியாவில் டில்லியில் இருக்கும் புத்திசாலிகளே தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியா மிகப்பெரும் ஆபத்தில் இருக்கிறது. பாகிஸ்தான், நேபாளம், வங்கா ளம், இலங்கை போன்ற நாடுகள் ஏற்கனவே சீனாவின் ஆதிக்கத்துக்குள் சென்றுவிட்டது. தற்போது இந்திய பெருங்கடலும் அவர்களின் ஆதிக்கத்துக்குள் செல்லவிருக்கிறது.
இதுமட்டும் நடந்து விட்டால் இந்தியாவுக்கு மட்டுமல்ல... தெற்காசிய நாடுக ளுக்கே மிகப்பெரிய அச்சுறுத்தல். இந்தக் கடல் நம்மிடம் இருக்கும் வரை க்குமே இந்தியாவுக்குப் பாதுகாப்பு. அதற்கு தமிழீழம் அமைய வேண்டும். அப்போதுதான் அது சாத்தியம்." எனத் தெரிவித்தார்.