Breaking News

கோத்தாவின் விடுதலை மனு நிராகரிப்பு.!

எவன்காட் வழக்கிலிருந்து தான் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்று குறித்த மனுவை இன்று நிராகரித்துள்ளது. இதில் முன்னாள் பாதுகாப்பு செயலா ளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பிரதி வாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் வழக்கு தொடரப்பட்டது. 

எவன்காட் மிதக்கும் ஆயுத களஞ்சிய சாலையை பராமரித்துச் செல்வதற்காக அனுமதியளித்த காரணத்தினால் அர சாங்கத்திற்கு 1,140 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு ள்ளது. இந் நிலையில், கோத்தா உள்ளிட்ட 6 பிரிதிவாதிகளும் அடிப்படை எதி ர்ப்பு மனுவொன்றை தாக்கல் செய்து இதில் பிரதிவாதிகளை விடுதலை செய்யு மாறும் கோரியிருந்தனர். எனினும் குறித்த மனு இன்று நிராகரிக்கப்ப ட்டுள்ளது.