70வது சுதந்திர தினம் இன்று எமக்கான சுதந்திரம் கிடைக்கவில்லை.!
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினம் ஆனால் எமக்கான சுதந்திரம் இல்லாத நிலையே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், வவுனியாவில் இன்று (04.02.2018) அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டி வீதியில் பிரதான தபால் நிலை யத்திற்கு முன்பாக, கடந்த 346 ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், 70 ஆவது சுதந்திர தினத்தி ற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்படி கவ னயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதன்போது 70 ஆவது சுதந்திர தினத்தினைக் கொண்டாடும் ஸ்ரீலங்காவின் சிங்கள மக்களுக்கு வாழ்த்துக்கள், இப்படிக்கு தொடர்ந்தும் சுதந்திரத்திற்காக போராடும் தமிழர்கள் என, வாசகம் பொறிக்கப்பட்ட பதாதையை தாங்கியிரு ந்ததுடன், தமிழ் யுத்த கைதிகள் இன்றும் ஸ்ரீலங்கா சிறையில் ஸ்ரீலங்காவில் காணாமல் ஆக்கப்பட்டோர் 20,000 தமிழர்கள், தமிழர்களை கடத்தவும், சிறை யில் வைக்கவும் உருவானதே பயங்கரவாத தடைச்சட்டம் என்ற வாசகங்க ளும், குறித்த பதாதையில் பொறிக்கப்பட்டு காணப்பட்டன.