Breaking News

ஐ.தே.க விற்கு எவருடனும் உடன்பாடு இல்லையாம் - சாகல ரத்நாயக்க.!

சட்டம் ஒழுங்கை சீராகப்பேணி ஒரு புதிய சூழலை உருவாக்குவதே எமது தேவையாக உள்ளது. ஐக்கிய தேசிய கட்சியான எங்களிற்கு எவருடனும் எது விதமான டீலும் இல்லையென சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆங்கில ஊடகம் ஒன்றி ற்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரி வித்துள்ளார். 

வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பதற்கு நாங்கள் விரைவில் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வருவோம். நாங்கள் யாருடைய நலனுக்காகவும் எமது கொள்கைகளை மாற்ற வில்லை. 2020 இல் எவ்வாறு தேர்தலைச் சந்தி ப்பது என்று ஐக்கிய தேசியக் கட்சி இது வரை எதுவித முடிவும் எடுக்க வில்லை. 

இலங்கை பொலிஸை மீளமைப்பு செய்வது அவசியமாகிறது. திட்டமிடப்பட்ட குற்றங்களிற்கு எதிராக நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம். எங்களிற்கு மக்களுடனேயே டீல் உள்ளது. சட்டம் ஒழுங்கை சீராகப்பேணி ஒரு புதிய சூழலை உருவாக்குவதே எமது தேவையாக உள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதால் மட்டும் அந்த வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்குமெனக் கூற முடியாது. மக்கள் அவரவர் விருப்பப்படியே வாக்களிப்பர் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.