Breaking News

கூட்டமைப்பை ஒழிக்க பல கட்சிகள் திட்டம் – சார்ல்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளை பல நாடுகள் இணைந்து அழித்தது போன்று தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பை பல கட்சிகள் இணைந்து அழிப்பதாக வன்னி மாவ ட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பயங்கர வாதிகளின் தலைவர் எனக் கூறும் அமைச்சர் ரிஷாத் பதியூதினுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பது பொரு த்தமா எனக் கேள்வியெழுப்பியது டன்   மன்னார் - பெரிய கமம் பகுதி யில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேர்தல் காலங்களில் மாத்திரம் நாட்டின் ஏனைய கட்சிகள் தமிழ் மக்களை தேடி வருவார்கள் என தெரிவித்த நாடாளுமன்ற உறு ப்பினர், வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழ் மக்களுடைய உரி மைகளை வென்றெடுத்த பின்னரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடரு மெனத் தெரிவித்துள்ளார்.  

எனவே, வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மாத்திரமே தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என தெரிவிப்பதற்கு, ஜனநாயக வாக்குரி மையை உரியமுறையில் பயன்படுத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பி னர் சார்ல்ஸ் நிர்மலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.