Breaking News

இதுவரை வெளியான முடிவுகளில் 7 மாவட்டங்கள் மஹிந்த அணி கையகம்.!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவருகின்ற நிலையில் இதுவரை வெளியான முடிவுகளின்படி 7 மாவட்டங்களில் முன்னாள் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகிக்கின்றது. 

இதற்கமைய கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், மொணராகலை ஆகிய மாவ ட்டங்களில் மஹிந்த அணி முதலி டத்தைப் பிடித்திருக்கிறது. நுவரெ லியா, மன்னார், வன்னி, அம்பாறை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்க ளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி முன்னிலையில் திகழ்கின்றது. ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொலன்னறுவை மாவட்டத்தில் முன்னிலை வகிக்கின்றது.