Breaking News

தேர்தல் பெறுபேறுகள் இன்றிரவு ஏழு மணியளவில் தெரிவாகலாம்!

நாட்டில் தற்போது நடை பெற்றுக்கொ ண்டிருக்கின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறு, இன்று இரவு 7.00 அளவில் வெளியாகலாமென எதிர்பா ர்ப்புக்கள் காணப்படுகின்றன. விகிதா சார மற்றும் தொகுதி கலப்புமுறை யில் நடைபெறும் இந்த தேர்தலில் தெரிவாகவுள்ள இந்த உறுப்பினர்கள், ஒரு உள்ளுராட்சி மன்றங்களுக்காக அளிக்கப்படும் வாக்குகளிலேயே தங்கியுள்ளது. உள்ளுராட்சி மன்றத்திற்கு ட்பட்ட ஒரு வட்டாரத்திற்கான வாக்குகள் வட்டார வாக்களிப்பு நிலையத்தி லேயே எண்ணப்படும். பல வாக்களிப்பு நிலையங்கள் இருக்குமாயின் கணிச மாக வாக்குகள் உள்ள நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு ஒரே இட த்தில் வைத்து எண்ணப்படும். 

இருப்பினும் வாக்குகள் வெவ்வேறாகவே எண்ணப்படும். இன்று நடைபெறும் தேர்தலில் வரலாற்றில் முதன்முறையாக, அளிக்கப்பட்ட வாக்குகள் குறிப்பி ட்ட உள்ளுராட்சி மன்றத்தில் வட்டார வாக்களிப்பு நிலையங்களிலேயே எண்ணப்படவுள்ளது. 

வாக்குகள் எண்ணும் பணி 3 கட்டங்களாக இடம்பெறும். முதலாவது கட்ட த்தில் ஒவ்வொரு வாக்குப்பெட்டிகளிலுமுள்ள வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். இரண்டாம் கட்டத்தின் கீழ் அந்த வட்டாரத்திற்கு உட்பட்ட தபால் மூல வாக்குகள் எண்ணப்படும். 

தபால் மூல வாக்குகளின் எண்ணிக்கை 50இற்கு அதிகமாக இருந்தால் தனி யாகவும், 50க்கு குறைவாக இருப்பின் அவற்றை ஏனைய வாக்குகளுடன் கல ந்தும் எண்ணப்படும். மூன்றாம் கட்டத்தின் கீழ் ஒவ்வொரு கட்சி அல்லது சுயே ட்சை குழுக்களினால் பெற்ற வாக்குகள் வெவ்வேறாக எண்ணப்படும்.

வாக்குகள் எண்ணப்படும்போது சந்தேகம் தொடர்பாக ஏதேனும் கட்சி அல்லது சுயேட்சைக்குழுக்களின் முகவரினால் முன்வைக்கப்படும் கோரிக்கைக்கு அமைவாக, வாக்குகள் எண்ணும் முகவரினால் வாக்குகள் மீள எண்ணப்படும். 

இந்த கோரிக்கைகளுக்கு அமைவாக வாக்குகள் இரண்டு தடவை மாத்திரமே எண்ணப்படும். இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தலின் போது மாவட்டங்க ளில் அளிக்கப்பட்ட வாக்குகளின் பெட்டிகள் ஒரு இடத்திற்கு கொண்டு செல்ல ப்பட்டு அங்கு கதவுகள் மூடப்பட்ட அறைக்குள் எண்ணப்பட்டு, மறுநாள் காலை யில் முடிவுகள் வெளிவந்தது ஆனால் இம்முறை அவ்வாறான நடைமுறை நடைபெறாது.