Breaking News

பிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை!

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை செய்துள்ளதாக சர்வதேச தகவல் வட்டாரங்கள் தெரிவித்து ள்ளன. 

கடந்த சில மாதங்களாக கடும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் தற் கொலை செய்துள்ளதாக  தெரிவிக்க ப்பட்டுள்ளது. முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் படித்த அணுசக்தி இய ற்பியலாளரான டயஸ் பலார்ட், கியூப மாநில கவுன்சிலின் அறிவியல் ஆலோசகராகவும், கியூபா அறிவியல் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியவர். மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 68 வயதான டயஸ் பலார்ட், கடந்த பல மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, பின்னர் தொடர்ந்து வீட்டிலிருந்து சிகிச்சை பெற்றுவந்த இவர், விரக்தியில் தற்கொலை செய்துள்ளார்.  

கியூபாவை ஐந்து தசாப்த காலமாக ஆட்சி செய்துவந்த பிடல் காஸ்ட்ரோ கடந்த 2016ஆம் ஆண்டு தனது 90ஆவது வயதில் காலமானார். அவர் மறைந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், அவரது மகன் இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளமை கியூப அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள துடன், மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவரது இறுதிக் கிரியை கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.