விடுவிக்குமாறு கோரி கோட்டாபய நீதிமன்றில் மனுத்தாக்கல்.! (காணொளி)
சர்ச்சைக்குரிய அவன் கார்ட் சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து தான் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவிக்குமாறு கோரி, முன்னாள் பாதுகாப்பு செய லாளர் கோட்டாபய ராஜபக்ச மீள்பரிசீலனை மனுவொன்றை தாக்கல் செய்து ள்ளார்.
கொழும்பு மேன் முறையீ்ட்டு நீதி மன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டு ள்ளது. அவன்காட் மெரிடைம் நிறுவ னத்திற்கு மிதக்கும் ஆயுத களஞ்சிய சாலையொன்றை பராமரித்துச் செல்வதற்காக அனு மதியளித்து, அர சாங்கத்திற்கு ஆயிரத்து 140 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதான குற்றச்சாட்டு முன்னாள் பாதுகாப்புச் செய லாளர் கோட்டாபய ராஜபக்ச மீது காணப்படுகிறது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, அவன்காட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ உட்பட 6 பிரதிவாதிகளுக்கு எதிராகவே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கிலிருந்து எவ்விதக் குற்றச்சாட்டுக்களும் இன்றி விடுதலை செய்யுமாறு கோரி கடந்த வருடம் கோட்டாபய ராஜபக்ச சார்பாக மனுவொ ன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட 6 பிரிதிவாதிகளும் அடிப்படை எதிர்ப்பு மனு வொன்றை தாக்கல் செய்து, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் ஆணைக்குழுவின் எழுத்துபூர்வ அனுமதியின்றி குறித்த வழ க்கினை தாக்கல் செய்துள்ளதாகவும், பிரதி வாதிகளை விடுதலை செய்யுமா றும் மனுதாரர்கள் கோரியிருந்தனர்.
இம் மனுவை கடந்த வருடம் நவம்பர் மாதம் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் மனுவை நிராகரித்திருந்த நிலையிலேயே குறித்த வழக்கில் இருந்து தான் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவிக்குமாறு கோரி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜ பக்ச மீள்பரிசீலனை மனுவொன்றை தாக்கல் செய்திருக்கின்றார்.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்சவின் சகோதரரும், முன்னாள் பொருளா தார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச மற்றும் திவிநெகும திணை க்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு ஜூன் மாதத்துக்கு பிற்போடப்பட்டுள்ளது. திவிநெகும திணைக்கள த்துக்குச் சொந்தமான நிதியை தவறான முறையில் பயன்படுத்திய குற்ற ச்சாட்டுக்கு அமையவே அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் திவிநெகும திணைக்களத்துக்கு சொந்த மான நிதியை தவறான முறையில் பயன்படுத்தி GI ரக குழாய் கொள்வனவு செய்து அவற்றை உள்ளூராட்சி மன்றங்களுக்கு விநியோகித்த சம்பவம் தொட ர்பிலேயே அவர்களுக்கெதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது