காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு - கிளிநொச்சியில் .!
கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் இன்று புதுமுறிப்புக்குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம், முச்சக்கர வண்டி உரிமையாளரான கிளிநொச்சி உதய நகர் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் தனுஷன் (25) என்ற இளைஞனுடைய தென அடையாளம் காணப்பட்டு ள்ளது.
நேற்று மாலை குறித்த இளை ஞன் முதல் காணாமல் போயிருந்த தாகவும், உறவினர்கள் அவரைத் தேடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.