Breaking News

இந்தியா திறந்த பூப்பந்து போட்டி காலிறுதியில் சாய்னா, சிந்து.!

இந்தியாவின் திறந்த பூப்பந்து போட்டியின் காலிறுதி சுற்றுக்கு சாய்னா மற்றும் சிந்து தகுதி பெற்றுள்ளனர். இந்தியாவின் திறந்த சூப்பர் சீரிஸ் பூப்பந்து போட்டிகள் டெல்லியில் ஆரம்பமாகி நடைபெற்ற வருகின்றது. இப் போட்டிகள் உலக தரவரிசையில் முன்னிலையில் உள்ள பூப்பந்து வீரர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இப் போட்டி ஒன்றில் நேற்று நடை பெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு க்கான 2 ஆவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்துவும் பல்கேரி யாவின் லின்டா ஜீட்சிரியும் மோதியு ள்ளனர். இருவருக்கும் இடையில் நடைபெற்ற போட்டயில் 21 ற்கு 10 மற்றும் 21 ற்கு 14 என்ற கணக்கில் பிவி சிந்து நேர்செட்டில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதே போன்று நடைபெற்ற மற்றொரு இந்தியாவின் சாய்னா நோவாலும் டென்மார்க்கின் லின் ஹோஜ்மார்க்கும் மோதியுள்ளனர். இருவருக்கும் இடை யில் நடைபெற்ற போட்டியில் 21 ற்கு 12 மற்றம் 21 ற்கு 11 என்ற நேர்செட் கண க்கில் இந்தியா வீராங்கனை சாய்னா வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.