Breaking News

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜரானார் ஊவா மாகாண முதலமைச்சர்.!

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

பதுளை தமிழ் மகளிர் பாடசாலை அதி பரை முழந்தாளிட வைத்து அவமதி ப்புக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பி ல், மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று 2 ஆம் கட்ட விசாரணையை மேற்கொள்ளவுள்ளது. இந்நிலையில், ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். இதேவேளை, சம்பவம் தொடர்பில் வாக்குமுலம் வழங்குவதற்காக பதுளை வலய கல்விப் பணிப்பா ளர் சரத் ரணசிங்க மற்றும் பதுளை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஈ.எம். வீ. தென்னகோன் ஆகியோருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணை க்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.