அர்ஜுன் அலோசியஸ், கசுன் பாலிசேன ஆகியோருக்கு விளக்கமறியல்.!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தி னரால் 4 ஆம் திகதி காலை கைதாகிய இருவரும் கோட்டை நீதிவான் முன் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பேர்ப்பச்சு வல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் கொள்ளு ப்பிட்டி பிளவர் வீதியிலுள்ள வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணை க்களத்தினரால் கைதாகியுள்ளார்.
பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன, வௌ்ளவத்தை அர்துசா வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பிலான விசாரணை குறித்து கடந்த வௌ்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த குற்றப் புல னாய்வுத் திணைக்களம், அர்ஜுன் அலோசியஸ். கசுன் பாலிசேன, அர்ஜுன் மகேந்திரன் ஆகியோரை சந்தேக நபர்களாக தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னதாக நாடு திரும்பி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்கு மூலமளிக்குமாறு அர்ஜுன் மகேந்திரனுக்கு நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.
இவர்கள் தொடர்புபட்டதாக சில குற்றங்களையும் குற்றப் புலனாய்வுத் திணை க்களம் கண்டறிந்துள்ளது. உள்ளக இரகசிய தகவல்களை பயன்படுத்தியமை, சதித் திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை பெரும் குற்றமாகும்.