ஜனாதிபதி, பிரதமருக்கு அழைப்பாணை - கொழும்பு மேல் நீதி மன்று.!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகி யோரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதி மன்றம் மீண்டும் அழைப்பாணை விடுத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு ள்ள வழக்குத் தொடர்பாகவே இவ் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொது வேட்பாளராக கள மிறங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்ட மைப்பு இணைந்து இரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்த நாயக்க ஊடக வியலாளர் சந்திப்பொன்றை நடத்தி பகிரங்கப்படுத்தியிருந்தார்.
இதன்போது திஸ்ஸ அத்தநாயக்கவினால் இந்த ஒப்பந்தம் தொடர்பான ஆவ ணங்களும் ஊடகங்களுக்கு முன்பாக பகிரங்கப்படுத்தப்பட்டன.
எனினும் இவ்வாறு வெளியிடப்பட்ட ஆவணங்கள் போலியான தயாரிக்கப்பட்டவை என்றும், இவற்றை வௌியிட்டமையால், இனங்களுக்கு இடையிலான நல்லு றவை பாதிக்கும் வகையில் செயற்பட்டதாகவும் சுட்டிக்காட்டி, திஸ்ஸ அத்த நாயக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சாட்சியாளர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்த போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டு ள்ளது.
எனினும் கடந்த டிசம்பர் 4 ஆம் திகதி வரவு செலவு திட்ட விவாதம் இடம்பெற்றமையினால் குறித்த இருவரும் நீதிமன்றில் முன்னிலையாக வில்லை.
இதனால் வழக்கு விசாரணை இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்க ப்பட்டதுடன் இன்றைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரதமரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டது.
எனினும் இன்றைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நீதிமன்றில் சமுகமளிக்காமையினால் இருவருக்கும் மீண்டும் அழைப்பாணை பிறக்க ப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 24 ஆம் திகதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.