மறுபடியும் நீரோடைக்குள் வீழ்ந்தது கார் ; மூவர் மீட்பு, ஒருவரைக் காணவில்லை
பதுளை, மஹியங்கனை வீதியால் சென்றுகொண்டிருந்த காரொன்று வியானா நீரோடைக்குள் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவி த்துள்ளனர்.
குறித்த காரில் நால்வர் பயணித்து ள்ளதாகவும் சாரதி உட்பட மூவர் காப்பாற்றப்பட்டதாகவும் மேலும் ஒரு வர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கையில் இச் சம்பவம் இன்று காலை 7 மணிய ளவில் இடம்பெற்றுள்ளது.
மீட்கப்ப ட்டவர்களில் பெண் ஒருவர் அடங்கு வதாகவும் அவர்கள் மூவரும் படுகாயமடைந்த நிலையில், மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலி ஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் காணாமல்போனவரைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணை களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் இவ்வாறானெதொரு சம்பவம் அண்மையில் இடம்பெற்ற நிலையில், இதில் கணவன் மனைவி மற்றும் அவர்களது மகனொ ருவரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.