மஹிந்தவை எதிர்க்கட்சி தலைவராக்குங்கள்.!
மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினராக இருப்பதுதான் எதி ர்க்கட்சி தலைமைத்துவத்தை அவருக்கு வழங்குவதற்கு இடையூறாக இரு க்குமாக இருந்தால் அதனை நீக்கினாலும் எப் பிரச்சினையும் இல்லையென பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
இதற்காக தாம் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவை வலியுறுத்துகி ன்றோம் என மேலும் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுக்கு வழங்க கோருகின்றமை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் குறிப்பிடுகையில்,
மக்களிடம் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு 2015 ஆம் ஆண்டு தேர்தலில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் மக்கள் அன்று செய்த தவறை உணர்ந்துவிட்டனர். அதனால்தான் இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்து அதன் மூலம் சிறந்த பாட த்தை கற்பித்துள்ளனர்.
தமக்கான சேவையை வழங்கக்கூடிய உரிய தலைமைத்துவத்தை மக்கள் தங்களது வாக்குகள் மூலம் தெரிவு செய்துள்ளனர்.
எனவே தான் நாம் எதிர்க்க ட்சி தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழ ங்குமாறு வலியுறுத்துகின்றோம்.
எனினும் எதிர்க்கட்சி தலைமைத்துவத்தை ஒப்படைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இல்லை. ஆனால் நாம் இந்த விடயத்தில் அசாதாரண மாக இருக்கப்போவதில்லை.
எதிர்க்கட்சி தலைமைத்துவத்தை மஹிந்தவுக்கு வழங்குவதற்கு எதிராக பல்வேறு கருத்துக்களை பல்வேறு தரப்பினரும் முன்வைக்கின்றனர்.
மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினராக உள்ளார். அதன் கார ணமாக அவருக்கு எதிர்க்கட்சி தலைமைத்துவத்தை வழங்க முடியாது என்ற கருத்தினையும் ஒரு சாரார் முன்வைத்துள்ளனர்.
ஆகவே அவர் எதிர்க்கட்சி தலைமைத்துவத்தை ஏற்பதற்கு தடையாக இருக்குமாக இருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால மஹிந்தவை தாராளமாக நீக்கலாம். அதனால் எமக்கு பாதகமான விளைவு ஏற்படப் போவதில்லை என்றார்.