Breaking News

நாட்டையே உலுக்கிய இரட்டை கொலை - வழக்கின் தீர்ப்பு.!

ஜேர்மனியின் ஹெர்ன் நகரில் பெற்றோருடன் வாழ்ந்து வந்த மர்கல் ஹெசி என்னும் 20 வயது இளைஞன் வேலை இல்லாத காரணத்தினால் எப்போதும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சோகத்தில் மூழ்கி வாழ்ந்துள்ளார்.

இதனால் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளான குறித்த இளைஞன் கடந்த வருடம் மார்ச் மாதம் தனது வீட்டின் அருகே வசித்து வந்த 9 வயது சிறு வனை 52 முறை குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். 

கொலைக்கு பின் தன் நண்பன் வீட்டி ற்கு தப்பியோடிய இளைஞன் அங்கு தன் நண்பனையும் 62 முறை குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இர ண்டாவது கொலையின் பின்னர் ஹசி தானாகவே முன்வந்து சரணடைந்து ள்ளார். 

ஹசியை விசாரித்த நீதிபதிகள் அவரை மைனராக கருதி தண்டனையை குறைவாக வழங்கியுள்ளனர். குற்றத்தை தானாக ஒப்புக்கொண்ட ஹசி மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இருந்தமையால் தீர்ப்பின் மீது மேல் முறை யீடு செய்யப்பட்டது. 

 இந்நிலையில் மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹசி செய்த குற்றத்தின் தண்டனையாக அவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை தீர்ப்பை வழங்கியுள்ளனர்.