Breaking News

மொஹமட் நஷீடை விடுதலை செய்ய நீதிமன்றம் அனுமதி.!

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் மற்றும் எட்டு எதிர்க்க ட்சித் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு மாலைதீவு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட், பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்ப ட்டு, விசாரணைகளுக்குட்படுத்தப்ப ட்டதையடுத்து அந்நாட்டு குற்றவி யல் நீதிமன்றத்தால் அவருக்கு 13 வருட சிறைத்த ண்டனை வழங்கப்ப ட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. 

மொஹமட் நஷீட்டின் ஆட்சிக்காலத்தில் 2012 ஆம் ஆண்டு நீதிபதியொருவரை தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என குற்றவியல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நடுவர் குழாம் தீர்ப்பளித்திருந்தது. 

இந்நிலையில், மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் மற்றும் எட்டு எதிர்க்கட்சித் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு மாலைதீவு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.