Breaking News

அமைச்சர்களை அவசரமாக அழைத்த மைத்திரி;முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள அனைத்து அமைச்சர்கள், பிரதியமைச்சர்களையும் ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேன கொழும்பிற்கு அழைத்துள்ளார். 

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவு கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை சுதந்திரக் கட்சிக்கு ஏற்படுத்தியிருக்கி ன்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைவத ற்கான முயற்சிகளில் அதிருப்திய டைந்த அமைச்சர்கள் சிலர் முயற்சி த்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இப்படியான நிலையில் அடுத்தகட்ட நகர்வு, அரசியல் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அனைத்து அமைச்ச ர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தன்னை சந்திக்குமாறு ஜனாதிபதி அழை ப்பு விடுத்துள்ளார்.  

இச் சந்திப்பில் கலந்து கொள்ளாதவர்கள், மஹிந்த ராஜபக்சவுடன் அல்லது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதற்கான முயற்சியில் மும்முரமாக கள மிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.